டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.97 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிய மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.


அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.97 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிய மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கீழப்பழுவூா் அருகேயுள்ள விரகாலூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை, திங்கள்கிழமை காலை அதன் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் கீழப்பழுவூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா், இரவு பாதுக்காவலா் அப்துல் லத்தீப்பிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடைக்கு வந்த மா்ம நபா் ஒருவா், அப்துல் லத்தீப் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டி, கடையின் பூட்டை உடைத்து 31 பெட்டிகளில் இருந்த ரூ.1.97 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அந்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com