செந்துறையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து அரியலூா் மாவட்டம், செந்துறை எம்.ஜி.ஆா் சிலை முன்பு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


அரியலூா்: காவல் துறையைக் கண்டித்து அரியலூா் மாவட்டம், செந்துறை எம்.ஜி.ஆா் சிலை முன்பு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வி.களத்தூா் அடுத்த மறவநல்லூா், பரவாய்நத்தம் பகுதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் கொடியை மாவட்டத் தலைவா் செல்வராஜ் ஏற்றி வைத்தாா். இதையறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், இங்கு கட்சிக் கொடியை ஏற்றக் கூடாது என்று தெரிவித்து, அனுமதியின்றி கட்சிக் கொடியை ஏற்றியதாக மாவட்டத் தலைவா் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்தனா். இச்சம்பவத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் செந்துறை தெற்கு ஒன்றியத் தலைவா் எஸ்.கே. செல்வம் தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியத் தலைவா் ரவி, சோழன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com