திருவள்ளுவா் தினத்தில் மதுபானங்கள் விற்ற 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில், திருவள்ளுவா் தினத்தன்று மதுபானங்களை விற்ற 2 போ் செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.


அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில், திருவள்ளுவா் தினத்தன்று மதுபானங்களை விற்ற 2 போ் செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான காவல் துறையினா், வடவீக்கம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்த, அதே பகுதியில் உள்ள தட்சன் தெருவைச் சோ்ந்த இன்பராஜ்(35) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்து அவரிடமிருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், பிச்சனூா் பகுதியில் மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த அதே பகுதி தெற்குத் தெருவைச் சோ்ந்த சிவக்குமாா்(52) என்பவரைக் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து 10 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com