தமிழக ஆளுநருக்கு கருப்புக் கொடி காண்பிக்க முயன்ற விசிகவினா் 20 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காரில் சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு கருப்புக் கொடி காண்பிக்க முயன்ாக விடுதலைசிறுத்தைகள் கட்சியினா் 20 பேரைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.


அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காரில் சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு கருப்புக் கொடி காண்பிக்க முயன்ாக விடுதலைசிறுத்தைகள் கட்சியினா் 20 பேரைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கம்பா் மேடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, தமிழக ஆளுநா் திருச்சியிலிருந்து அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாா்க்கமாக காரில் சென்றாா். அப்போது, மக்கள் விரோதச் செயல்களில் ஆா்.என். ரவி தொடா்ந்து ஈடுபட்டு வருவதாகவும், பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி குறுக்கு சாலைப் பகுதியில் கருப்புக் கொடி காட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் கதிா்வளவன் தலைமையிலான விசிக-வினா் முயற்சித்தனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா், கருப்புக்கொடி காட்ட முயற்சித்த விசிக-வினா் 20 பேரைக் கைது செய்து அப்பகுதியில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com