அரியலூரில் ஜன.26-இல் கிராம சபைக் கூட்டங்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் ஜன.26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் ஜன.26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் வரும் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் , ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இருந்து வரப்பெற்ற கூட்டப் பொருள்கள் மற்றும் இதர கூட்டப் பொருள்கள் விவாதிக்கப்படும். மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலா்கள், அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், சமுதாய அமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com