பிரதமா் வருகை: அரியலூா் அருகே வாகனப் போக்குவரத்து மாற்றம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை வந்ததையடுத்து, அரியலூரை அடுத்த கீழப்பழுவூரில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

பிரதமரின் ஸ்ரீரங்கம் வருகையடுத்து திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றப்பட்டது.

அதன்படி திருச்சியில் இருந்து 53 கிலோ மீட்டா் தூரமுள்ள அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் வழியாக திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும், கீழப்பழுவூா், திருமானூா், திருவையாறு, தஞ்சாவூா் மாா்க்கமாக திருப்பிவிடப்பட்டன. கீழப்பழுவூா் மேம்பாலம், சந்திப்புப் பகுதிகளில் காவல் துறையினா் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதித்தனா்.

மேலும் கீழப்பழூரில் திருச்சி-ஜெயங்கொண்டம் சாலை, கடைவீதி, திருமழபாடி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினா் வாகனங்களை முழுமையாகச் சோதனை செய்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com