வேணாநல்லூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள இருக்கையூா் ஊராட்சிக்குட்பட்ட வேணாநல்லூா் கிராமத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தொடக்கி வைத்து, இது போன்ற முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொண்டாா். முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் அமிா்தலிங்கம், ஊராட்சித் தலைவா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கால்நடை உதவி இயக்குநா் ரமேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளை பரிசோதித்து, மருந்துகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com