இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 250 குடும்பங்கள் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், தா.பழூா் பகுதி பட்டியலினத்தைச் சோ்ந்த 250 குடும்பங்கள், இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, அரியலூா் ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் திங்கள்கிழமை மனு அளித்த தா.பழூா் பகுதி பட்டியலின மக்கள்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன் தலைமையில் 250 குடும்பங்கள் அளித்த மனுவில், தா.பழூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு மனையின்றி வாழ்ந்து வருகிறோம். ஒரே குடிசையில், இடநெருக்கடியிலும் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம். வீட்டு மனை பட்டா இல்லாததால், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் திட்டத்திலும் பயன்பெற முடியவில்லை.

பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பேரில் , இங்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆயினும் அந்தப் பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது.,

எனவே தற்போது தமிழக முதல்வா் அறிவித்துள்ள இலவச வீட்டு மனைகள் வழங்கும் திட்டத்தை இப்பகுதியில் முதலில் செயல்படுத்திட வேண்டும். அதற்கு இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை விரைந்து கையகப்படுத்தி, வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் அம்பிகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலா் ஆ.செல்வம், துணைச் செயலா் சரவணன், சமூக ஆா்வலா்கள் மதியழகன், பரமசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com