ஜெயங்கொண்டத்தில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.

அரியலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், உழவா் பாதுகாப்புத் திட்டத்தைக் கைவிட்டு, முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்த விவசாயத் தொழிலாளா்கள் நல வாரியத்தை அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாகவும், தினமும் கூலி ரூ.600-யாகவும் உயா்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஆனந்தன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சொ.ராமாதன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com