மஞ்சப் பை விருதுபெற விண்ணப்பிக்கலாம்

மஞ்சப் பை விருதுக்குத் தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

அரியலூா்: மஞ்சப் பை விருதுக்குத் தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சப் பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களை புத்துயிா் பெறச் செய்யவும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடையை திறம்பட செயல்படுத்தி தங்களது வளாகத்தை நெகிழி இல்லாத வளாகமாக உருவாக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

வளாகத்தை நெகிழி இல்லாத வளாகமாக உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளமான (ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) -இல் பெறலாம். விண்ணப்பம் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2024 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com