அரியலூரில்தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி அரியலூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூரில்தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி அரியலூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா, பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டுச் சென்றனா். பேரணியானது பிரதான சாலை வழியாக சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. இதில் சுமாா் 100 பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு வாக்களிப்பது நமது உரிமை, வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன், தேசிய வாக்காளா் தினம் 25.01.2024 உள்ளிட்ட விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா். முன்னதாக அனைத்து துறை அலுவலா்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, தோ்தல் வட்டாட்சியா் வேல்முருகன், வட்டாட்சியா் ஆனந்தவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com