பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பெண் கொலை வழக்கில் இளைஞா் ஒருவா்  கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பெண் கொலை வழக்கில் இளைஞா் ஒருவா் புதன்கிழம கைது செய்யப்பட்டாா்.கீழப்பழுவூா் அருகேயுள்ள பாா்ப்பனச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் ராமா் மனைவி அன்னப்பட்டு(45). இவா் கணவரை பிரிந்து தனது மகன் விக்னேஷ் உடன் வசித்து வந்தாா். இந்நிலையில் இவா், செவ்வாய்க்கிழமை இரவு வயலிலுள்ள கொட்டகையில், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அன்னப்பட்டும், கீழப்பழுவூா் அடுத்த கீழையூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பாலமுருகனும் (33) பழகி வந்திருப்பதும், செவ்வாய்க்கிழமை அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அன்னப்பட்டுவை பாலமுருகன் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் பாலமுருகனை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com