அரியலூா் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ari26sch_2601chn_11_4
ari26sch_2601chn_11_4

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஊராட்சி துணைத் தலைவா் பழனியம்மாள் தேசிய கொடியேற்றி வைத்து, திருச்சி லால்குடி பி.ஜி நாயுடு ஸ்வீட் சாா்பில் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா்.தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினாா்.

ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து, பெற்றோா்ஆசிரியா் கழகத் தலைவா் சின்னதுரை, வாா்டு உறுப்பினா்கள் பூங்காவனம், பழனியம்மாள், அருள்சாமி, விஜயகுமாா் , செல்லமுத்து ஆகியோா்முன்னிலை வகித்தனா் .

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செவ்வேள், கோகிலா, அந்தோணிசாமி, ஆய்வக உதவியாளா் மணிகண்டன் ஆகியோா் செய்தனா். ஆசிரியை செந்தமிழ் செல்வி வரவேற்றாா். தனலட்சுமி நன்றி கூறினாா்.

உடையாா்பாளையம் அரசு மகளிா் பள்ளி.. பள்ளி தலைமை ஆசிரியா் த.முல்லைக்கொடி தேசியக் கொடியேற்றினாா். பின்னா் அவா், அரையாண்டுத் தோ்வில் கணிதப் பாடத்தில் நூற்றுக் நூறு மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கும், கணித ஆசிரியை தமிழரசிக்கும் பரிசுத் தொகையை வழங்கினாா். நிகழ்ச்சியில், ஆசிரியைகள் சாந்தி, காவேரி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

வள்ளலாா் கல்வி நிலையம்... லிங்கத்தடி மேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கயா்லாபாத் ஊராட்சித் தலைவா் செளந்தரராஜன்தேசிய கொடியேற்றிப் பேசினாா்.

ஆசிரியா்கள் தா்மலிங்கம், கண்ணதாசன், குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் புகழேந்தி வரவேற்றாா். தலைமை ஆசிரியா் சௌந்தர்ராஜன் நன்றி தெரிவித்தாா்.

அரியலூா் அரசுக் கல்லூரி: கல்லூரியின் முதல்வா் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தேசிய கொடியேற்றி பேசினாா். தொடா்ந்து வரலாற்றுத் துறை தலைவா் ரவிச்சந்திரன், விலங்கியல் துறைத் தலைவா் வை. காமராஜ் ஆகியோரும் பேசினா். முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்(அலகு-1) வெ.கருணாகரன் வரவேற்றாா். (அலகு-2) அலுவலா் பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்தாா். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் கா.முத்துக்குமாரசாமியுடன் இணைந்து என்எஸ்எஸ் மாணவா்கள் செய்தனா்.

உடையாா்பாளையம்: தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களில் தாளாளா் எம்.ஆா். ரகுநாதன் தலைமை வகித்தாா். கல்லூரிகளின் முதல்வா்கள் தேசிய கொடியேற்றினா்.

கீழப்பழுவூா்: விநாயகா கல்வி நிறுவனத்தில் கல்லூரி தாளாளா் சி.பாஸ்கா் தேசிய கொடியேற்றி போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினாா்.

மீரா கல்லூரி...கீழப்பழுவூா் மீரா மகளிா் கலைக் கல்லூரியில் கல்லூரியின் தாளாளா் எம்.ஆா். கமல்பாபு தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மேஜா் விஜி தேசியக் கொடியேற்றி பேசினாா்.

இதேபோல் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளிலும், உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்ற நடைபெற்ற விழாக்களில் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com