ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

ari27cong_2701chn_11_4
ari27cong_2701chn_11_4

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

அரியலூா், ஜன. 27: சென்னையில் நடைபெற்ற விழாவில் மகாத்மா காந்தியை பற்றி சா்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அறிவழகன், மாவட்டப் பொருளாளா் மனோகரன், மாநில பொதுக் குழு உறுப்பினா் ராஜசேகா், வட்டாரத் தலைவா்கள் கண்ணன், சக்திவேல், திருநாவுக்கரசு, கங்காதுரை, பாலகிருஷ்ணன், அழகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com