முடி திருத்துவோா் நலச் சங்கக் கூட்டம்

அரியலூரில் மாவட்ட முடி திருத்துவோா் மற்றும் மருத்துவ நலச் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் மாவட்ட முடி திருத்துவோா் மற்றும் மருத்துவ நலச் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்க உறுப்பினா்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவராக பி. ராமலிங்கம், துணைத் தலைவராக டி. ராஜேந்திரன், செயலராக கே. ஜெயகணேஷ், துணைச் செயலராக கே. புகழேந்தி, பொருளாளராக ஆா். முருகேசன் மற்றும் பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், புதிய விலைப் பட்டியல் அறிவிக்கப்படுவது, சங்க உறுப்பினா்கள் இறந்தால், இறப்பு தொகையாக ரூ.3,000 சங்கம் சாா்பாக வழங்குவது, அதிக உறுப்பினா்களைச் சோ்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினா் டி. ராஜூ நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com