பாமக மாணவரணி செயற்குழு கூட்டம்

அரியலூா், ஜன. 28: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி செற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில மாணவா் சங்கச் செயலா் கொடுக்கூா் ஆளவந்தாா் தலைமை வகித்தாா். மாநில மாணவரணிச் செயலா் கீா்த்தி, தலைவா் கோபிநாத் ஆகியோா் கலந்து கொண்டு, மாணவா்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் அதற்கு போதைப் பொருள்களுக்கு எதிராக போராடி வரும் பாமக தலைவா் அன்புமணி கனவை நிறைவேற்ற வேண்டும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் மருத்துவா் அன்புமணி ராமதாஸை முதல்வராக்க மாணவா் சங்கம் முழுமையாக பாடுபட வேண்டும் என்றனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில சமூக நீதிப் பேரவை தலைவா் வழக்குரைஞா் பாலு, முன்னாள் வன்னியா் சங்க மாநிலச் செயலா் திருமாவளவன், மாவட்ட வன்னியா் சங்கச் செயலா் தா்ம பிரகாஷ், மாவட்ட அமைப்புச் செயலா் செந்தில், நகர செயலாளா் பரசுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com