சாத்தமங்கலம், திருமானூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா், ஜன. 28: அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் மற்றும் திருமழபாடி துணை மின் நிலையங்களில் திங்களள்கிழமை (ஜன.29) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழகொளத்தூா், திருமானூா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனூா், மஞ்சமேடு, சேனாபதி, தட்டான்சாவடி, கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி பரதூா், வண்ணம்புத்தூா், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, ஆங்கியனூா், அருங்கால், கோவிலூா், செட்டிகுழி, சின்னப்பட்டாகாடு, கீழஎசனை, ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, பெரியமறை, அழகியமணவாளன், காமரசவல்லி, குருவாடி, தூத்தூா், வைப்பூா், மேலராமநல்லூா், கீழராமநல்லூா், திருமழபாடி, அரண்மனைக்குறிச்சி, அன்னிமங்கலம், பாளையபாடி, புதுக் கோட்டை, இலந்தைகூடம், கண்டராதித்தம், க.மேட்டுதெரு, பாக்கியநாதபுரம், வைத்தியநாதபுரம், விளாகம், வெங்கனூா், கோயில்எசனை, குலமாணிக்கம், செம்பியக்குடி, அடைக்கல புரம், சன்னாவூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என திருமானூா் மின்சார வாரிய செயற்பொறியாளா் விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com