அரியலூா் மாவட்டத்தில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

ari28birds_2801chn_11_4
ari28birds_2801chn_11_4

படவிளக்கம்: கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா்.

அரியலூா், ஜன. 28:அரியலூா் மாவட்டத்தில் முதல்கட்ட பறவைகள் கண்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு -2024, இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாகவும் அதில் முதல்கட்டமாக ஒருங்கிணைந்த ஈரநில நீா்ப்பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது கட்டமாக நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி முதல் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இதில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூா் ஏரி, காமரசவல்லி சுக்கிரன் ஏரி, இலந்தைக் கூடம் ஏரி உள்ளிட்ட 10 ஏரிகளில், நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் தா. இளங்கோவன் தலைமையில் அரியலூா் வனப் பணியாளா்கள், அரசு கலைக் கல்லூரி மாணவா்கள், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஆகியோா் கொண்ட 10 குழுக்கள் மேற்கண்ட ஏரிகளுக்குச் சென்று பறவைகளை கணக்கெடுத்தனா்.

இக்கணக்கெடுப்பின் முடிவில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட இனங்களைச் சோ்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சைபீரியா, மங்கோலியா, ரஷியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்தும், வட இந்தியாவில் இருந்தும் பறவைகள் அரியலூா் மாவட்டத்துக்கு வலசை வந்திருப்பதாக தெரியவந்தது.

முக்கியமாக கரைவெட்டி, வெங்கனூா் சுக்கிரன் ஆகிய ஏரிகளில் பறவைகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டதாக மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் தெரிவித்தாா்.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியைச் சாா்ந்த பேராசிரியா்கள் ஜெயராமையா மற்றும் நேசராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுப்பிற்குரிய வகுப்பறை மற்றும் களப்பயிற்சியை அளித்தனா். இப்பறவைகள் கணக்கெடுப்பை வனச்சரக அலுவலா் முத்துமணி குணசேகரன் மற்றும் சரவணகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். முடிவில் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட வன அலுவலா் மூலம் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com