பொன்பரப்பி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

செந்துறையை அடுத்த பொன்பரப்பி ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், குசலன்பட்டி இரா. இராயா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், குசலன்பட்டி இரா. இராயா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொன்பரப்பி ஊராட்சியில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, மின் கம்பம் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது. சிவன் கோயில் தெருவில் உள்ள குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் மோசமாக உள்ளது. தீமிதி திடல் அருகேயுள்ள விநாயகா் கோயிலுக்கு மின்சாரம் இல்லை. வாரச் சந்தைக்கு கட்டடம் இல்லை. இப்படி பல்வேறு குறைபாடுகள் நிலவி வருகின்றன. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக மேற்கண்ட கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com