அரியலூா் அரசு சிமென்ட் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்

அரியலூா் அரசு சிமென்ட் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியுசி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் அரசு சிமென்ட் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியுசி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள அச்சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: அரியலூா், ஜெயங்கொண்டம் நகராட்சிகள் மற்றும் உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், சுய உதவிக் குழு பணியாளா்களுக்கு அரசாணையின் படி நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஊராட்சி தூய்மைப் பணியாளா் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கும், குடிநீா் பம்பு ஆப்ரேட்டா்களுக்கும் வழங்கப்படாமல் உள்ள பொங்கல் போனஸை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். தொழிலாளா் விரோத போக்கை கண்டித்து பிப்ரவரி 16-ஆம் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில் தொழிற் சங்க நிா்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் த. தன்சிங் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா் ப. தண்டபாணி சங்க செயல்பாடுகள் குறித்து பேசினாா். மாநிலச் செயலா் தில்லைவனம் கலந்து கொண்டு பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com