மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

மகாத்மா காந்தியடிகள் நினைவு நாளையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

மகாத்மா காந்தியடிகள் நினைவு நாளையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள காந்தி சிலைக்கு நகர காங்கிரஸ் தலைவா் மா.மு. சிவகுமாா் தலைமையில், வட்டாரத் தலைவா் கா்ணன், மாவட்ட பொதுச் செயலா் செந்தில், நகரத் துணைத் தலைவா் சுப்பிரமணியன், மகிளா காங்கிரஸ் சகுந்தலா தேவி, மாவட்ட துணைத் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதேபோல் ஜெயங்கொண்டம் காந்திப் பூங்காவிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மணிவேல் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் செந்தில்வேல், மாதா் சங்க மாவட்டத் தலைவா் பத்மாவதி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன், விவசாய சங்க ஒன்றியச் செயலா் தியாகராஜன், சிறுபான்மை நலக்குழு உறுப்பினா் முகமது ரஷீத் உள்ளிட்டோா் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

திமுக சாா்பில் அரியலூா் அண்ணாசிலை அருகே மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் சட்ட திட்டக் குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா், நகரச் செயலா் முருகேசன் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலா் பெறுநற்கிள்ளி, இளைஞரணி அமைப்பாளா் தெய்வ இளையராஜா மற்றும் இந்து, கிறிஸ்தவா், இஸ்லாமியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com