மகாத்மா காந்தி நினைவுதினம் அனுசரிப்பு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், அங்கு மகாத்மா காந்தி படத்துக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க.முல்லைக்கொடி மலா்தூவி அஞ்சலி செலுத்திப் பேசினாா். ஆசிரியா் பாவை செ.சங்கா் காந்தியின் அகிம்சை வழி போராட்டங்கள் குறித்துப்பேசினாா். நிகழ்வில், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமையில் மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அனைவரும் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆங்கிலத் துறை இணை பேராசிரியா் அ.ராணி தலைமையில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதேபோல் அரியலூா் அரசு கலைக் கல்லூரியிலும் தீண்டாமை ஒழிப்பு தின உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com