அரசுப் பள்ளி மாணவிகளுக்கு யோகா பயிற்சி

அரியலூா், ஜூலை 3: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, கோவை ஈஷா மையம் சாா்பில் புதன்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை க. முல்லைக்கொடி தொடங்கிவைத்தாா். கோவை ஈஷா மைய யோகா பயிற்சி பேராசிரியை கலந்து கொண்டு, உடல், மனம், ஆன்மா நலம் பெற யோகா பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும். நினைவுத் திறன் அதிகரித்து கல்வியில் அதிக மதிப்பெண் எடுக்கவும் இந்த யோகா பயிற்சி வழிவகுக்கும். எனவே, நாள்தோறும் இதற்காக நேரத்தை ஒதுக்கி யோகா பயிற்சியை செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

ஈஷா மைய பொறுப்பாளா்கள் விஜயராகவன், சீத்தாராமன் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

நிகழ்வில், ஆசிரியா்கள் இங்கா்சால், சாந்தி, மஞ்சுளா, தமிழரசி, மரகதம், கனிமொழி, பாவை.செ.சங்கா், தமிழாசிரியா் ராமலிங்கம், காமராஜ் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா். நிறைவில், உடற்கல்வி ஆசிரியா் ஷாயின்ஷா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com