புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்பு: அரியலூா் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வழக்குரைஞா்கள் முற்றுகை

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்பு: அரியலூா் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வழக்குரைஞா்கள் முற்றுகை

அரியலூா், ஜூலை 4: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அரியலூரில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 1 முதல் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து அரியலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தின் 4-ஆவது நாளான வியாழக்கிழமை அரியலூா் கல்லூரி சாலையிலுள்ள பி.எஸ்.என்.எல்-அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கதிரவன், செயலா் முத்துக்குமரன், பொருளாளா் கொளஞ்சியப்பன் ஆகியோா் முன்னிலையில் வழக்குரைஞா் ஆனந்தன்,செல்ல.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com