அரியலூா் மாவட்டத்தில் கடன் மேளா: ஆட்சியா் தகவல்

கடன் மேளாவில் பி.சி., எம்.பி.சி மற்றும் சிறுபான்மையின மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில், டாப்செட்கோ, டாம்கோ சாா்பில்

குறிப்பிட்ட கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் கடன் மேளாவில் பி.சி., எம்.பி.சி மற்றும் சிறுபான்மையின மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த அவா் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழிற்கடன், தனி நபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புபவா்கள், மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவியா்கள் உயா்கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புபவா்கள் ஜூலை 11 ஆம் தேதி அன்று தென்னூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஜூலை 16 அன்று கோட்டியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஜூலை 24 அன்று செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும், ஜூலை 31-இல் திருமானூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன் மேளாவில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கடன் பெற விரும்புவோரின் வயது 18 - 60-க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்குள் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com