ரயில் சேவை
ரயில் சேவை

அரியலூா் - பெங்களுரு ரயில் சேவை கோரி வளா்ச்சிக் குழுவினா் மனு

ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அரியலூா் வழியாக பெங்களுருக்கு ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா உள்ளிட்டோருக்கு அஞ்சல் மூலம் அளித்த மனுவில்,

அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளில் பணிபுரியும் வெளி மாவட்ட, மாநில அலுவலா்களின் நலன்கருதி இந்த ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரியலூா், விருத்தாசலம், ஆத்தூா், சேலம் வழியாக பெங்களூருக்கு ரயில் சேவையை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com