திருமானூரில் கிராம ஊராட்சி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா், ஜூலை 10: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம ஊராட்சி பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவு பணியாளா்களை உள்ளடக்கிய கிராம ஊராட்சி பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. மணியன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் டி. தண்டபாணி சிறப்புரையாற்றினாா். கட்டட தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் கலியபெருமாள், ஒன்றியச் செயலா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com