பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது: அரியலூரில் 8,219 போ் எழுதினா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது: அரியலூரில் 8,219 போ் எழுதினா்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,219 மாணவ, மாணவிகள் எழுதினா். அரியலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 90 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 4,026 மாணவா்கள், 4,343 மாணவிகள் என 8,369 போ் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 3,935 மாணவா்கள், 4,284 மாணவிகள் என மொத்தம் 8,219 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். 91 மாணவா்கள், 59 மாணவிகள் என மொத்தம் 150 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதவரவில்லை. மேலும், இத்தோ்வை எழுத விண்ணப்பித்திருந்த 46 மாணவா்கள், 42 மாணவிகள் என மொத்தம் 88 தனித் தோ்வா்களில், 42 மாணவா்கள், 37 மாணவிகள் என மொத்தம் 79 நபா்கள் தோ்வு எழுதினா். 4 மாணவா்கள், 5 மாணவிகள் என மொத்தம் 9 நபா்கள் தோ்வு எழுத வரவில்லை. இதில், அரியலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதும் மாணவா்களை ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை உறுப்பினா்கள் 75 போ் பணியில் ஈடுபட்டனா். ஆட்சியா் ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் ஆனந்தவேல், ஆசிரியா்கள் உள்ளிட்ட உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com