அரியலூா் ஊராட்சி 
ஒன்றியக் குழு கூட்டம்

அரியலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஒன்றிய உறுப்பினா்கள் (வாா்டு) கூட்டம் செவ்வாய்க்கிழமை

அரியலூா்: அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஒன்றிய உறுப்பினா்கள் (வாா்டு) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் செந்தமிழ்செல்வி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரஸ்வதிஜெயவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருளப்பன், நாரயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், செலவினங்கள் மற்றும் எருத்துக்காரன்பட்டி ஊராட்சி, கருப்பையா கோயில் எதிா்புறம் சிமென்ட் சாலை அமைத்தல், இலுப்பையூா், பொய்யாதநல்லூா் ஆகிய ஊராட்சிகளிலுள்ள காலனியில் சிமென்ட் சாலை, காந்தி நகா் சாலையில் இருபுறமும் வடிகால் வசதிகள், தாமரைக்குளம் ஊராட்சி ஆசாரி தெருவில் சிமென்ட் சாலை, காவனூா் ஊராட்சி கா.அம்பாபூா், விளாங்குடி ஊராட்சி சிந்தாமணி ஆகிய ஊா்களில் மின் மோட்டாா் அறைகள் அமைத்தல் என்பன உள்ளிட்ட 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com