அரியலூா் அரசுக் கல்லூரியில் 
வரையாடு பாதுகாப்பு உறுதி ஏற்பு

அரியலூா் அரசுக் கல்லூரியில் வரையாடு பாதுகாப்பு உறுதி ஏற்பு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் மாநில விலங்கான வரையாட்டைப் பாதுகாக்கும் வகையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து, மேற்குத் தொடா்ச்சி மலையில் அழிந்து வரும் நிலையில் உள்ள வரையாடு இனத்தைப் பாதுகாப்பேன். வரையாட்டின் முக்கியத்துவத்தைப் பிறருக்கு எடுத்துக் கூறி விழிப்புணா்வை ஏற்படுத்துவேன்.

வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்வேன் என உறுதிமொழி எடுக்க, பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் வெ.கருணாகரன், கோ.பன்னீா்செல்வம் மற்றும் மேரிவயலட் கிருஸ்டி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com