அரியலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து 15 கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.

பின்னா் அந்த மனுக்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com