மாற்றுத்திறனாளிகள் 83 பேருக்கு 
நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் 83 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசினா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்தாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் முகாமைத் தொடக்கி வைத்தும், 83 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12.51 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா். முகாமுக்கு, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் கா.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், யுடிஐடி பெறாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் செய்து கொள்ளவும், உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மற்றும் இதர துறை சாா்ந்த நலத்திட்ட உதவிகள் தேவைபடுவோா், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் தொடா்பான மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவா்கள் பதிவு செய்து கொள்ளவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முகாமில், வருவாய்க் கோட்டாட்சியா்கள் அரியலூா் ராமகிருஷ்ணன் , உடையாா்பாளையம் ஷீஜா , மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com