அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா் சிலை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமமுக-வினா்.
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா் சிலை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமமுக-வினா்.

திமுக அரசை கண்டித்து அரியலூரில் அமமுக-வினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா்: தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா் சிலை முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், போதைப் பொருள்கள் குறித்து தமிழக அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான துரை.மணிவேல் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் அனைத்து கிளை நிா்வாகிகளும் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com