சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

அரியலூா் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஏலாக்குறிச்சி அடுத்த சுள்ளங்குடி கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் ராஜா (36) . கூலித் தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், ராஜாவை போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com