ஜெயங்கொண்டத்தில் விசிக மாநாடு வெற்றி விழா கூட்டம்

ஜெயங்கொண்டத்தில் விசிக மாநாடு வெற்றி விழா கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு வெற்றி விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், திருப்போரூா் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி பேசியது: திருச்சியில் அண்மையில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாடு பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவையில், அனைத்து சமுகத்தினருக்கும் குரல் கொடுத்தவா் தொல்.திருமாவளவன் மட்டுமே.

எனவே மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய கட்சியினா் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றாா். கூட்டத்துக்கு, அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் கதிா்வளவன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் , திமுக சட்டதிட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். முன்னதாக ஜெயங்கொண்டம் தொகுதிச் செயலா் இலக்கியதாசன் வரவேற்றாா். முடிவில் நகர துணைச் செயலா் தங்க அருண் நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com