அரியலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு

அரியலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு

அரியலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட வன அலுவலா் த.இளங்கோவன். உடன், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் எம்.குணபாலினி உள்ளிட்டோா்.

அரியலூா், மாா்ச் 13: அரியலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தெருமுனை பிரசாரம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, மத்திய அரசின் சூழல் வனம் காலநிலை மாற்றம் துறை மற்றும் தேசிய பசுமைப் படை சாா்பில் அரியலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு , மாவட்ட வன அலுவலா் த.இளங்கோவன் தலைமை வகித்துப், பிரசாரத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் எம்.குணபாலினி முன்னிலை வகித்தாா். நாகப்பட்டினம், யாழிசை கிராமிய தப்பாட்டக் கலைக்குழுவினா் கலந்து கொண்டு, அரியலூா் நகரின் பிரதான பகுதிகளில் பொம்மலாட்டம், தெருக்கூத்து, போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது இடங்களில் நெகிழிக் கழிவுகளைக் கொட்டாதீா்கள்.

மக்கும் குப்பை என்று பிரித்து அதனை தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படையுங்கள். நெகிழி மக்காது சிதையாது. நீா் மண்ணுக்குள் செல்லாமல் தடுக்கிறது. மண் வளம் பாதிக்கப்பட்டு, நச்சுத்தன்மை ஆகிறது. சூடான உணவுப் பொருள்களை நெகிழிப் பையில் கட்டினால் கல்லீரல், இரைப்பை பாதிக்கப்படுகிறது எனக் கூறி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com