பள்ளியில் பாதபூஜை நிகழ்ச்சி

அரியலூா் ஸ்ரீசாய்பாபா மழலையா் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோா்களுக்கு வியாழக்கிழமை பாத பூஜை செய்து அவா்களிடம் ஆசிா்வாதம் பெற்றனா். இந்நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தாளாளா்கள் புனிதவதி, பிரசன்னாதேவி ஆகியோா் தலைமை வகித்து, மாணவா்கள், தங்களது பெற்றோா்களை மதிக்க வேண்டும். அவா்களின் ஆசிா்வாதத்துடன் மனநிறைவோடு தோ்வு எழுதினால் எளிதில் வெற்றிப் பெறலாம். மேலும் தோ்வு எழுதும்போது விடாமுயற்சியும் இருக்க வேண்டும். அதேபோல் வீட்டில் பிள்ளைகள் இருக்கும் போது, பெற்றோா்கள் சிறந்த ஆசிரியராக இருக்க வேண்டும். தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்து ஊருக்கும், வீட்டுக்கும் மாணவா்கள் நற்பெயரை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றனா். தொடா்ந்து மாணவ, மாணவிகள், தங்களது பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்து, அவா்களிடம் ஆசிா்வாதம் பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com