அரியலூா் அருகே தொழிலாளி கொலை

அரியலூா் மாவட்டம், வெங்கனூா் அருகே தனது மனைவியுடன் தொடா்பில் இருந்த தொழிலாளியை வெட்டிக் கொன்ற கணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். வெங்கனூா் அருகேயுள்ள கொரத்தக்குடி கிராமத்தை சோ்ந்தவா் கு. மனோகரன் (45). இவரது மனைவி புஷ்வள்ளியுடன் அதே ஊரைச் சோ்ந்த தொழிலாளியான மருதமுத்து முகன் ரமேஷ் (40) என்பவா் தொடா்பில் இருந்தாராம். இதைக் கண்டித்தும் பயனில்லாததால் ஆத்திரமடைந்த மனோகரன் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரமேஷை வெட்டிக் கொன்று விட்டு, வெங்கனூா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதையடுத்து போலீஸாா் ரமேஷின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com