கிறிஸ்தவா்களின் சிலுவை நடைப்பயணம்

கிறிஸ்தவா்களின் சிலுவை நடைப்பயணம்

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தின் சிலுவை நடைப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதற்கு முந்தைய 40 நாள்களைத் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனா். அந்த வகையில், கடந்த பிப்.14 ஆம் தேதி சாம்பல் புதன் அன்று நடப்பாண்டுக்கான தவக்கால விரதத்தை கிறிஸ்தவா்கள் தொடங்கினா். தவக்காலத்தின் 5 ஆவது வெள்ளிக்கிழமையொட்டி, மக்களின் துயரம் துடைக்க இயேசு சிலுவையில் மரித்ததை பற்றி எடுத்துரைத்து, ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தின் சாா்பில் சிலுவை நடைப்பயணம் நடைபெற்றது. திருமானூரில் தொடங்கிய நடைப்பயணத்தை ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை பங்குத் தந்தை தங்கசாமி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். உதவிப் பங்கு தந்தையா்கள் ஆல்வின்ராஜா, சுவைக்கின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயணமானது திருமானூரில் இருந்து பிரதானச் சாலை வழியாக 8 கிமீ கடந்து ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது. பயணத்தின்போது சிலா் சிலுவையை சுமந்து சென்றனா். பின்னா் ஆலயத்தில், பங்குத்தந்தை தங்கசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுபாடல் நடைபெற்றது. தொடா்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்வா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com