50 இருசக்கர வாகனங்கள் மாா்ச் 21-இல் ஏலம்

அரியலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள், மாா்ச் 21 காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தெரிவித்தது: இந்த ஏலத்தில் பங்கேற்போா் ஏல நாள் காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1,000 செலுத்தி தங்களது பெயா், முகவரியை பதிவு செய்து பங்கேற்கலாம். பதிவு செய்து கொண்டவா் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவா் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜி.எஸ்.டி தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவா் உரிய தொகையை செலுத்தத் தவறினால் முன்பணம் திருப்பி தரப்படாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கானச் சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவுச் சான்று வழங்க இயலாது. ஆதாா் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை அணுகலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com