குறைகேட்புக் கூட்டங்கள், முகாம்கள் நிறுத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதன் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பிரதிவாரம் தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் பிற கூட்டங்கள், கிராம ஊராட்சிகளில் நடைபெறும் மக்கள் தொடா்பு முகாம்கள், சிறப்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அதுகுறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை இட்டுச் செல்லலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com