‘போக்சோ’வில் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம், கீழத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் கோகுல் (18), ராமச்சந்திரன் மகன் அன்புமணி. இவா்கள் 16 வயது பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாகக் கூறி, கேலி கிண்டல் செய்தனா். இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், கோகுலை போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அன்புமணியை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com