அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பெட்டியில் திங்கள்கிழமை கோரிக்கை மனுக்களை போட்டுச் சென்ற பொதுமக்கள்.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பெட்டியில் திங்கள்கிழமை கோரிக்கை மனுக்களை போட்டுச் சென்ற பொதுமக்கள்.

குறைதீா் கூட்டம் ரத்து: ஆட்சியரக வளாகத்தில் கோரிக்கை மனுக்களுக்காக பெட்டி வைப்பு

அரியலூா்: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை அறியாமல் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனா். தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன. இதனால் ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வரும் மக்கள் குறைகேட்புக் கூட்டம், இதர கூட்டங்கள், முகாம்கள் என அனைத்தும் மறு உத்தரவு வரை ரத்து செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச் செல்லுமாறு ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா். இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்த பொதுமக்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனு அளிக்கும் பெட்டியில் போட்டு சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com