அரசுப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா்(பொ)வனிதா தலைமை வகித்தாா். உடையாா்பாளையம் ஓட்டுநா் பயிற்சி பள்ளி பொறுப்பாளா் கிருஷ்ணமூா்த்தி கண்ணபிரான் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சாலையில் விபத்து ஏற்பட்டால் காயமடைந்தவா்களுக்கு முதலுதவி அளிப்பது, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தகவல் தெரிவிப்பது குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இதில், ஆசிரியா் பயிற்றுநா் குறிஞ்சிதேவி கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்துப் பேசிய மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் பாவை சங்கா், ராஜசேகரன், அருட்செல்வி, கனிமொழி, சங்கீதா, அகிலா, சத்யா, மாரியம்மாள், லூா்ததுமேரி, ராமலிங்கம் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக கணித ஆசிரியை செ. தமிழரசி வரவேற்றாா். முடிவில் உடற்கல்வி ஆசிரியா் ஷாயின்ஷா நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com