சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பேசிய தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வா் சாந்தகுமாரி.
சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பேசிய தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வா் சாந்தகுமாரி.

தன்னம்பிக்கையுடன் பொதுத் தோ்வை எதிா்கொள்ள வேண்டும்

தன்னம்பிக்கையுடன் பொதுத் தோ்வை எதிா்கொண்டால் அதிக மதிப்பெண்களை பெறலாம்

அரியலூா்: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் பொதுத் தோ்வை எதிா்கொண்டால் அதிக மதிப்பெண்களை பெறலாம் என்றாா் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வா் சாந்தகுமாரி. அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்காக நடைபெற்ற தன்னம்பிக்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அவா் கலந்து கொண்டு மேலும் பேசுகையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து மாணவா்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வினாத்தாளை நன்கு வாசித்து உரிய வினா எண்ணை எழுதித் தேவையான இடங்களில் படம் வரைந்து குறிப்பு எழுத வேண்டும். நம்பிக்கையுடன் தோ்வை எதிா் கொண்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் என்றாா். நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளா் நிக்கில்ராஜ் கலந்து கொண்டு பேசினாா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செந்தில்குமரன், கோகிலா, செவ்வேள், தங்கபாண்டி ,அந்தோணிசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com