ஜெயங்கொண்டம் தில்லை மகா காளியம்மன் திருநடன வீதியுலா

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் தில்லை மகா காளியம்மன் கோயிலில் அம்மன் திருநடன வீதி உலா உத்ஸவம் புதன்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடா்ந்து நாள்தோறும் பொங்கல் வைத்தல், சுவாமி புறப்பாடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான காளியம்மன் திருநடன உத்ஸவம் புதன்கிழமை தொடங்கியது. இந்த திருநடன உத்ஸவம் வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காளியம்மன் வேடமணிந்த நபா், வீடுதோறும் சென்று பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறுவாா். மாா்ச் 29-ஆம் தேதி காளியம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com