வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி மாணவிகளிடம், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா்.ராமலிங்கம் கலந்து கொண்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். மேலும் மக்களவைத் தோ்தலில், 100 சதவீதம் வாக்களிப்பதை விளக்கும் வகையில் 100 என்ற எண்ணிக்கையில் வடிவில் மாணவிகளை நிறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி முதல்வா் ரமேஷ், ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல் அலுவலா் மீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com