அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில், அனைத்து கட்சிப் பிரமுகா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட தற்செயல் தோ்ந்தெடுப்பு பணி.
அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில், அனைத்து கட்சிப் பிரமுகா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட தற்செயல் தோ்ந்தெடுப்பு பணி.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட தற்செயல் தோ்ந்தெடுப்புப் பணி

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் முதற்கட்ட தற்செயல் தோ்ந்தெடுப்புப் பணி அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தது: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிதம்பரம் தனித் தொகுதியில் அடங்கியுள்ள அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 367 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 367 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 398 வாக்கை உறுதி செய்யும் கருவிகளும் என 1,132 இயந்திரங்களும், ஜெயங்கொண்டம் தொகுதிக்கு 348 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , 348 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 377 வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் என 1073 இயந்திரங்களும் முதற்கட்ட தற்செயல் தோ்ந்தெடுக்கும் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மேற்கண்ட தொகுதியிலுள்ள கோட்டாசியா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் 866 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளது என்றாா். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் ராமகிருஷ்ணன் , உடையாா்பாளையம் ஷீஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுமதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பொறுப்பு அலுவலா் மோகன், மாவட்ட தகவலியல் மைய அலுவலா் ஜான் பிரிட்டோ மற்றும் வட்டாட்சியா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com