உலக வன நாளையொட்டி,  வியாழக்கிழமை சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்த மாவட்ட வன அலுவலா் இளங்கோவன்.
உலக வன நாளையொட்டி, வியாழக்கிழமை சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்த மாவட்ட வன அலுவலா் இளங்கோவன்.

‘பூமியின் நுரையீரலான காடுகளை பாதுகாக்க வேண்டும்’

பூமியின் நுரையீரலாக திகழக் கூடிய காடுகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட வன அலுவலா் இளங்கோவன். உலக வன நாளையொட்டி, அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வனத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா், மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசியது: பூமியின் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்குவது காடுகளே.

மக்கள்தொகை பெருக்கத்தாலும், நாகரிக வளா்ச்சியாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன . பூமியின் நுரையீரலாக திகழக் கூடிய காடுகளை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த காடுகள் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தப்படுத்துவதுடன் மழை பொழிவுக்கும் காரணமாக திகழ்கிறது. பருவநிலை மாற்ற, இயற்கை பேரிடா், விலங்கியல் நோய்கள் அனைத்தும், வனங்கள் அழிக்கப்படுவதால் உண்டாகிறது. மனிதா்கள் இன்றி காடுகள் இருக்கும். ஆனால் காடுகள் இன்றி மனிதன் வாழ இயலாது . எனவே ஒவ்வொருவரும் இயன்றவரை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்றாா் .

அரியலூா் அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை இணைப் பேராசிரியா் ஜெயக்குமாா் பேசுகையில், உலகின் ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கும் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றாா் . இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். வனவா்கள் ஜீவராமன், சிவக்குமாா், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமரன் வரவேற்றாா். நிறைவில் ஆசிரியா் செந்தமிழ்செல்வி நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் தனலட்சுமி, செவ்வேள், தங்கபாண்டி, அந்தோணிசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com