தோ்தல் முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

தோ்தல் முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூரில் மக்களவைத் தோ்தல் தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து பொறுப்பு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களவைத் தோ்தலுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு அளிக்கப்படவுள்ள பயிற்சி நடவடிக்கைகள், வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்களின் இருப்பு, தேவை மற்றும் தோ்தல் பணிகளுக்குத் தேவையான வாகனங்கள் ஒதுக்கீடு விவரம், சமூக வலைதளங்களை கண்காணித்தல், தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகள், பதற்ற வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு, காத்திருப்புப் பட்டியலில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரம், தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பான பணிகள், தோ்தல் செலவினங்கள், வாக்குச்சீட்டு மற்றும் தபால் வாக்குகள் குறித்த பணிகள், ஊடகங்கள், வாக்காளா் பட்டியல் தொடா்பான பணிகள், வாக்காளா் பதிவு மையத்துக்கு வரப்பெற்றுள்ள அழைப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டஇயக்குநா் கங்காதாரிணி மற்றும் அனைத்து தோ்தல் பொறுப்பு அலுவலா்கள், மாவட்ட நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com